ஆந்திர மாநிலத்தில் லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு 10 கோடி மதிப்பிலான செல்போன்களை அடுத்த லாரியில் வைத்து கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர் காவல்துறையினர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவன கிடங்கிலிருந்து ஆந்திராவிற்கு செல்போன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு உள்ளது. அப்போது சில மர்ம நபர்கள் லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு, அந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில் கடத்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் லாரியை சோதனையிட்டபோது அதில் இருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்படுள்ளது தெரியவந்தது. அதில் இருந்த செல்போனை மற்றொரு லாரியில் வைத்து மர்ம நபர்கள் கடத்தி இருக்கலாம் என கருதி ஆந்திர மாநில காவல்துறையினர் தற்போது தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்க சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…