உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரே மாதத்தில் 70 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் உடன் வீட்டை விட்டு ஓடிய புதுப்பெண்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் திருமணமாகி ஒரு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் ஒரு பெண் மாமியார் வீட்டில் இருந்து 70 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளுடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக அவரது கணவர் பிங்கு என்பவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஷாம்லி மாவட்ட காவல் நிலையத்தில் அவரது கணவர் அளித்த புகாரில், சிம்பல் எனும் கிராமத்தில் வசிக்க கூடிய தான் பகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் குறிப்பிட தங்க நகைகளையும் எடுத்துச் சென்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மனைவியின் குடும்பத்தினர் இருந்த பாகபாத் கிராமத்தில் மனைவி மற்றும் குடும்பத்தினர் குறித்து விசாரித்ததாகவும், அங்கு அவரது மனைவியும் சரி அவர் மனைவி குடும்பத்தினரும் சரி யாருமே இல்லை எனவும் அவர்கள் குறித்த எந்த தகவலும் அருகில் உள்ளவர்களுக்கும் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். திருமணமாகி ஒரே மாதத்தில் மாமியார் வீட்டிலிருந்து மருமகள் நகைகளை திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாம்லி மாவட்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…