எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில்; பெங்களூரு கூட்டத்தில் முடிவு.!

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களுருவில் நேற்றும், இன்றும் இரண்டு நாளாக எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தக்கூடிய மெகா கூட்டணி அமைக்கும் முனைப்பில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டம் நடத்துகின்றன.
இதன்படி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக்கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவிலும் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா(I-N-D-I-A Indian National Democratic Inclusive Alliance) என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இதன் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தேதி குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025