தங்கக்கடத்தல் வழக்கில், கேரளா தலைமை செயலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை பெங்களூரில் கைது செய்து, கொச்சியில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், தங்க கடத்தல் தொடர்பாக கேரளா தலைமை செயலகத்திற்கு சிவசங்கரனை சந்திப்பதற்காக சுவப்னா சுரேஷ் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், கேரள தலைமை செயலகத்தில் சோதனை நடத்த அனுமதி கோரியது. என்.ஐ.ஏ கோரிக்கையை ஏற்று, சோதனை நடத்த கேரள அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், தலைமை செயலகத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளையும், சில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வெளிநாடு பயணங்கள் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…