பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 20 கோடிகள் வரை வசூல் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

retro

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நாளை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தை கொண்டாட சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்னனர்.

இந்த படம் ஒரு காதல், ஆக்ஷன், டிராமா கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. Stone Bench Creations மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி ரூபாய் கோடி. ஏற்கனவே, படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருந்தது.

இந்த சூழலில், படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்யும் என்கிற கணிப்பு குறித்த தகவலானது தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாவதால், இந்தியாவில் முதல் நாள் நிகர வசூல் (Net Collection) ரூ.10-15 கோடி வரை இருக்கலாம். Sacnilk மற்றும் MTWiki போன்ற தளங்கள் கணித்துள்ளது.

அதைப்போல, வெளிநாட்டு சந்தைகளில் (அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், GCC நாடுகள்) சூர்யாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, முதல் நாள் உலகளாவிய மொத்த வசூல் (Gross Collection) ரூ.15-20 கோடி வரை வசூல் செய்யலாம். தமிழகத்தில் மட்டும் 6 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, படம் எவ்வளவு கோடி முதல் நாளில் வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்