இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி! மத்திய அரசு அளித்த முக்கிய தளர்வு..,
பஞ்சாப் மாநிலம் அமிர்தாரஸில் உள்ள அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் வெளியேறி செல்லலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ன. இரு நாட்டு எல்லைகள் மூடப்பட்டன.
இதனால், இரு நாட்டு எல்லை அருகே இருபப்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தாரஸில் மாவட்டத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லை பகுதி மூடியதால் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். தற்போது இவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு முக்கிய தளர்வு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்லலாம் என்றும் மறு உத்தரவு வரும் வரையில் இந்த தளர்வு உத்தரவு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுளள்து. இதனால் எல்லை பகுதியில் உள்ள பாகிஸ்தானியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலகட்டத்தில், அட்டாரி எல்லை வழியாக பல இந்திய மற்றும் பாகிஸ்தானிய நாட்டினர் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகளைக் கடந்தனர். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 926 பாகிஸ்தானிய குடிமக்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பினர், அதே நேரத்தில் 1,841 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பினர்.