"ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கும் தொழிலாளர்கள்!" விஜய் வாழ்த்து!

மே தின உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

TVK leader Vijay wishes May Day

சென்னை: இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின பூங்காவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் உழைப்பாளர் தின வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி.உறுதியை, ஒற்றுமையைப் படிகர்களாக்கி

எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி எடுத்த பணியை முடித்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம். உழைப்பாளர் உரிமை காப்போம்.இந்த மே தினத்தில் உழைப்பாளர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள என பதிவிட்டுள்ளார்.

unknown node