இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல்! எங்கு தெரியுமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, இன்று முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை அடுத்து, இங்கிலாந்தில் தற்போது புதிய வகை வைரஸ் பரவி வருவதால், இந்த புதிய வகை வைரசின் வடிவம் குறித்து, விவாதிப்பதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பின் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் உள்ளது. மக்கள் இந்த வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளையும் இன்று முதல் 31ஆம் தேதி வரை 7 நாட்கள் தனிமைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் பட்டியலை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, இன்று முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025