தற்போதை ஆன்மீக களத்தில் பேசுபொருளாக மாறியிருப்பவர் நித்யானந்தா. அதிலும் அவரது தனி நாடு, தனி பாஸ்போர்ட், தனி கொள்கை அனைவரது மத்தியிலும் பரபரப்பை கிளப்பியுள்ளார் நித்யானனதா.
நித்யானந்தா பெங்களூருவில் பிடதி ஆன்மீக ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த இந்த ஆசிரமத்தின் மீது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அதிலும் இந்த சர்ச்சைகளை கிளப்பியது ஆசிரமத்தில் இருந்த முன்னாள் சீடர்களே என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதிலும் , ஜனார்த்தனன் என்பவர் தனது இரு மகள்களையும் நித்தியானந்தா தனது ஆசிரமத்தில் வசியப்படுத்தி வைத்திருந்தார் எனவும், அவர்களை மீட்டுத்தருமாறும் போலீசில் புகார் அளித்து இருந்தார். ஜனார்த்தனன் ஏற்கனவே நித்யானந்தாவின் சீடராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது புதிய புகாராக நித்யானந்தா தனது பக்தர்கள் மூலம் வசூலித்த பணத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் ஈக்வேடார் நாட்டில் ஒரு தனி தீவை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த தீவிற்கு கைலாசம் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அந்த தீவிற்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி, தனி கொள்கைகள் என தனி நாடு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும்,
அதற்கான வேலைகளை அங்குள்ள சீடர்கள் செய்து வருகின்றனர் எனவும், தகவல் வெளியானது. தனி நாடு அந்தஸ்த்து வழங்க கோரி ஐநாவில் நித்தியானந்தா சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நித்தியானந்தா. பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து, உத்திர பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து நேபாள நாட்டிற்கு கார் மூலம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் தனது தனி நாடு கைலாச தீவிற்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கைலாச நாட்டில் ஆன்மீகமும், அமைதி, இறையாண்மை கொள்கைகள் பின்பற்றப்படும் எனவும், இங்கு அனைவருக்கும் இலவச கல்வி, ஆன்மீக மருத்துவம் என பலவசதிகளை இந்த தீவில் அறிமுகப்படுத்த உள்ளன என தகவல் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்கள் எல்லாம் தெரிந்த பிறகுதான் நித்யானந்தாவை பிடிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…