இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த 8 எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு இல்லை..!

Published by
murugan

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி இந்தியாவில் 3,23,144 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2771 உயிரிழப்புகள் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் 28,82,204 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட 71.68 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பத்து மாநிலங்களை சார்ந்தவர்கள். இந்நிலையில், மத்திய அரசு இதுவரை 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

இதன் அடையாளமாக, எட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை எந்த கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படவில்லை  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, லடாக், திரிபுரா, லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகியவை ஆகும்.

மகாராஷ்டிராவில் நேற்று 895 பேர் உயிரிழந்துள்ளனர். 66,358  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.பஞ்சாபில் நேற்று 5,932 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேர்  உயிரிழந்துள்ளனர். 3,774  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இருவரை  3,51,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

அதேபோல கர்நாடகாவில் 31,830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 180 பேர்  உயிரிழந்துள்ளனர். 10,793 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குஜராத்திலும்  14,352 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர்  உயிரிழந்துள்ளனர். 7,803 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று 24,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 381 பேர்  உயிரிழந்துள்ளனர். 17,862 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரியில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  தெரிவித்தார். மேலும், தடுப்பூசி மே 1 முதல் 18 -வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி  செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த  உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் தொற்றுநோயை வெல்ல அதிக அனுபவத்துடன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.

Published by
murugan
Tags: coronavirus

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

49 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago