கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கடன் தவணைகளை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், சில வங்கிகள் வட்டி வட்டி வசூலிப்பதாக புகார் எழுந்தது.
வங்கிக் கடன்களுக்கு வட்டி வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த மனுக்கள் தொடரபாக மத்திய அரசு சமீபத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது. அதில், கொரோனா பொதுமுடக்க காலத்தில் இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களின் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறையை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது.
இந்த குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் வட்டிக்கு வட்டி செலுத்தி இருந்தால் அதை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. கடந்த 14-ம் தேதி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சில வங்கிகள் இந்த உத்தரவை அமல்படுத்த ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என கூறினர். அதற்க்கு நீதிபதிகள், தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. எனவே எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ அதற்க்குள் செய்ய வேண்டும்.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை விரைவில் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது. இந்நிலையில், மார்ச் 1 முதல் ஆகஸ்டு 31-ஆம் தேதி வரையிலான கடன்களுக்கு வட்டி வட்டி வசூல் இல்லை எனவும், இரண்டு கோடி வரையிலான கடகளுக்கு வட்டி மீதான வட்டி தள்ளுபடி என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…