கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது- ராகுல் காந்தி

Rahul Gandhi

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி பேச்சு. 

கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில்  இருந்து வருகிறது. அந்த வகையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் .ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரியங்கா காந்தி அவர்கள், கடையில் தோசை சுட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது

Rahul Gandhi
[Image source : REUTERS]

இந்த நிலையில், இன்று கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது; குறைந்தத்த்து 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்