முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் உமர் காலித் மீண்டும் கைது செய்யப்பட்டு 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்பட்டு டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினால் கடந்த மாதம் செப்டம்பர் 13 -ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் உமர் காலித்திடம் பத்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
அடுத்த நாள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்றம் காலித்தை 10 நாட்கள் டெல்லி காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. செப்டம்பர் 24-ம் தேதி உடன் காவல்துறை காவல் அவகாசம் முடிந்த நிலையில், உமர் காலித்தை, பின்னர் அக்டோபர் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உமர் காலித் நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில், மீண்டும் போலீசார் மூன்று நாள் ரிமாண்டில் அழைத்துச் சென்றது என கூறப்படுகிறது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…