“ஒரே நாடு ஒரே தேர்தல்”! சிறப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு. அதன்படி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், மும்பையில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்று நிலையிலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆராய சிறப்பு குழு அமைத்துள்ளது மத்திய அரசு.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்த மத்திய திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 18ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025