இன்று 10 விமானங்கள் மூலம் 2300 இந்தியர்கள் இந்தியா வர உள்ளனர்.
உலகளவில் கொரோனாவால் 37 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 12 லட்சத்திற்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு வர முடியாமல் பல நாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஓமன், ஆகிய 12 நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர இன்று முதல்மே 13 வரை 64 சிறப்பு விமானங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து இன்று 10 விமானங்கள் மூலம் 2300 இந்தியர்கள் இந்தியா வர உள்ளனர். நாளை முதல் மே 13 ஆம் தேதி வரை வெளிநாட்டிலிருந்து மொத்தம் 11 சிறப்பு விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்பட உள்ளன.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…