பெங்களுருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்; மேற்குவங்க முதல்வர் மம்தா, கர்நாடகா வருகை.!

பெங்களுருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா கர்நாடகா வருகை.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் மிக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பாட்னாவில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை வெற்றி பெறும் நோக்கில் கூடின.
இதேபோல் இதன் இரண்டாவது கூட்டம் இன்று மற்றும் நாளை கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு 24 காட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இரண்டு நாள் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு வந்தனர். அவர்களை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார்.