இன்று முதல் மால்களை தவிர்த்து மற்ற கடைகள் இயங்கலாம் – மத்திய அரசு அதிரடி.!

Published by
பாலா கலியமூர்த்தி

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுவும், கடைகளை திறக்க நேரம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட கடைகள் இன்று முதல் திறந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இதையடுத்து கிராமப்புறங்களில் அத்தியாவசிய சேவைகளை வழங்க கூடிய அனைத்து வகையான கடைகளும் திறந்து கொள்ளலாம் என்றும் நகர்ப்புறங்களில் வணிக வளாகம் மற்றும் மார்க்கெட் போன்ற அதிக கூட்டம் சேரும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து முழுமையான கடைகள், அக்கம் பக்க கடைகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் உள்ள கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காலத்தில் சிறு, குறு தொழில் செய்வோர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுப்பிய நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் வராத பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட் காம்ப்ளக்ஸ்களில் உள்ள கடைகள் திறந்து கொள்ளலாம். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் அல்லாத பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட் ஏரியாக்களில் செயல்படும் கடைகள் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு 50 சதவீதம் அளவுக்கு தான் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். அதுவும், சமூக விலகல் பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். இந்த ஊரடங்கு தளர்வு நடைமுறை ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது. மதுபானக்கடைகளை பொறுத்தளவில் அந்தந்த மாநிலங்கள் வைரஸின் தாக்கத்தை பொறுத்தே நிர்வாகம் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் ஆன்லைனில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்துக்கும் தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கை அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்து அறிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

17 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

56 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago