எங்கள் கைகள் பூப்பறிக்காது.! இரு அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் முறியடிப்போம் – எச்சரிக்கை விடுத்த பிபின் ராவத்.!

Published by
பாலா கலியமூர்த்தி

வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்படும் இரு நாட்டு அச்சுறுத்தலை இந்தியா ஒரே நேரத்தில் முறியடிக்கும் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா இடையே கடந்த மே மாதம் முதல் லடாக்கில் பகுதியில் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. பின்னர் பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இரு தினங்களாக கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலை பயன்படுத்தி பாகிஸ்தானும் எல்லையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான், சீனா என இருநாடுகளையும் ஒரே நேரத்தில் இந்தியாவால் எதிர்கொள்ள முடியும் என்று முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அமெரிக்க – இந்திய கூட்டணி மன்றத்தின் கூட்டத்தில் பேசிய அவர், வடக்கு எல்லைகளில் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும்போது பாகிஸ்தான் அதை தவறாக பயன்படுத்தக்கூடும். எனவே இதுபோன்ற முயற்சிகளில் பாகிஸ்தான் வெற்றிபெறாமல் இருக்க நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தியா தற்போது பல்வேறு அச்சுறுத்தல்களையும், சவால்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சீனாவிடமிருந்து முரட்டுத்தனமான நடவடிக்கைகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இதை நம்மால் தக்க வழிகளில் கையாள முடியும். எந்தவொரு நேரத்துலும் நெருக்கடி ஏற்பட்டால் இந்திய பாதுகாப்பு படை சந்திக்க தயாராக இருக்கிறது. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்தியா ஒருங்கிணைந்த அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இரு அச்சுறுத்தல்களையும் ஒரே நேரத்தில் இந்தியாவால் எதிர்கொள்ள முடியும் என்று பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இந்தியா அமைதியை விரும்புவதகவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

14 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

45 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago