ஓயோ நிறுவனம் கொரோனா நோயாளிகள் மற்றும் பாதிப்படையாத சுகாதார பணியாளர்கள் தனிமைப்படுத்த OYO Care என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது.
நாட்டில் வளர்ந்து வரும் கொரோனாபரவலை கருத்தில் கொண்டு, ஹோட்டல் சேவை நிறுவனமான OYO, OYO Care என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதில் கொரோனா நோயாளிகள் மற்றும் பாதிப்படையாத சுகாதார பணியாளர்கள் தனிமைப்படுத்த ஓயோ நிறுவனம் அறைகள் வழங்குகிறது.
தனிப்படுத்த சரியான இடம் இல்லாததால் பல வீடுகளில் ஒரே அறை, ஒரே கழிவறை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டில் உள்ள மற்ற நபர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால், ஓயோ நிறுவனம் OYO Care என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஓயோ குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரித்தீஷ் அகர்வால் தனது ட்விட்டரில் “நாங்கள் ஓயோ கேர் முயற்சியைத் தொடங்கினோம். ஓயோவின் இந்த பாதுகாப்பான வசதி சுகாதார ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் குடும்பங்கள் மீதான சுமையை குறைக்கும்.
மேலும், தனிமைப்படுத்த தேவைப்படும் நபர்களுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்குவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக சுமார் 30 மருத்துவமனைகள், பல அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…