மின்சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரயில்வே நிலையங்களில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் என ரயில்வேதுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்வே துறை சார்ந்த அனைத்துப் பகுதிகளிலும் நூறு விழுக்காடு எல்இடி விளக்குகளைப் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிலையங்கள், ஊழியர் குடியிருப்புகள், நடைமேடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களில் […]
மோட்டார் வாகன சட்டம் தினம் தினம் புதுபுது சட்டங்களை புகுத்தி மக்களை குழப்ப்புகிறது. இதன்படி, தற்போது கார்கள், மற்றும் இருசக்கர வாகனங்களில் ‘கிரஸ் கார்ட்’ அல்லது ‘புல் பார்’ என்று அழைக்கபடும் தடுப்பு கம்பிகள் பொருத்துவது குற்றம் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. அவ்வாறு புல் பார் பொருத்துவது மோட்டார் வாகன சட்டத்தின் 52ஆம் பிரிவை மீறுவதாக அமைகிறது. மேலும் அந்த சட்டத்தின் 190 மற்றும் 191-ம் பிரிவின் படி தண்டனைகுரிய குற்றமாகும். எனவே இதனை […]
ஐபிஎஸ் உயர் அதிகாரியும் முன்னாள் ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் தடுப்புத் துறை இயக்குநருமான ஜேக்கப் தாமஸை கேரள அரசு இடைநீக்கம் செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் ஜேக்கப் பேசியதைத் தொடர்ந்து, அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில், கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும் ஊழலுக்கு எதிராகப் போராட மக்கள் அச்சப்படுவதாகவும் அவர் பேசியதாக அரசுத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கு குறித்து இவ்வாறு […]
குஜராத் மாநிலம் 182 தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு 99 தொகுதி மட்டுமே கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளை பெற்றுள்ளது. கடந்த 33 வருசத்தில் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் பெற்ற அதிகபட்சமாகும். இந்த தேர்தல் பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மிகுந்த திருப்தியை தருகிறது. முடிவுகள் நல்ல விதமாக உள்ளன. 3 மாதங்களுக்கு முன்பு நான் குஜராத்துக்கு சென்றபோது காங்கிரசுக்கு […]
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் விடுதலையாக உள்ளார்.நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்,நீதிபதிகளின் செயல்பாடுகள் ஆகியவைகளை பற்றி விமர்சித்த நீதிபதி கர்ணன் ஜீன் 20ஆம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார்.இப்போது 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு கொல்கத்தா சிறையிலிருந்து விடுதலையாகிறார். இவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் பிஜேபி தனது ஆட்சியை தக்கவைத்து கொண்டது.இதனையடுத்து குஜராத்தின் நவ்ரான்பூராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்தில் குஜராத் டிஜிபி பிரமோத்ஜா ஆய்வு நடத்தியுள்ளனர்.
கேரளா, மீனவர்களுக்காக “க்ரூப் ஆக்சிடென்ட் இன்ச்சுரன்ஸ்”என்னும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை கேரள மீன்வளத்துறை மற்றும் கேரள மீனவர்கள் நலவாரியம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மீன்பிடிக்க சென்று காணாமல்போகும் மீனவர்கள் மற்றும் படுகாயம் அடையும் மீனவர்களுக்குக் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 – 70 வயதுடைய மீனவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். மேலும் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்து மூலம் உயிரிழக்கும் மீனவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம்வரை காப்பீடு கிடைக்கும் என்றும் கேரள அரசு […]
குஜராத், இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்களை தேர்வு செய்வதற்காக இரு முக்கிய தலைவர்களைக் கொண்ட இரண்டு குழுக்களை பா.ஜ.க. மேலிடம் அமைத்துள்ளது. குஜராத், இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் ஆட்சிமன்றக் குழுவில் உள்ள முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் குஜராத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பொறுப்பு, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோரிடம் வழங்கப்பட்டது. […]
குஜராத் தேர்தலில் ஆளும் பாஜக 99 இடங்களை கைபற்றியுள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக வட்காம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்த ஜிக்னேஷ் மேவானி தனது வெற்றியை குறித்து பேட்டி ஒன்றில், ‘நாடு மாற்றத்தை விரும்புகிறது, அதற்கு தயாராகிவிட்டது. அதனால்தான் 150 இடங்களை கைப்பற்றும் என உறுதியாக கூறிய பாஜகவால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது’ என கூறினார். மேலும் படிக்க www.dinasuvadu.com
குஜராத் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாகரிகமான பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சியின் குஜராத் தேர்தல் பொறுப்பாளருமான அசோக் கெலாட் தெரி வித்துள் ளார். குஜராத் தேர்தல் முடிவு குறித்து அசோக் கெலாட் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் குஜராத்தில் நாகரிமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். பஸ் பயணங்கள் மூலம் மக்களோடு நெருக்கமாக இருந்தார். காங்கிரசும் அவரது வழியில் பிரச்சாரம் செய்தது. தேர்தல் முடிவுகளை ராகுல் காந்தியின் […]
சிறப்பு ரயில்கள் இயக்கம் சென்னை எழும்பூர்-கோவை இடையே டிச.20 இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். அதேபோல் அகமதாபாத்-மங்களூரு இடையே டிச.23,30 தேதிகளில் இரவு 9.35 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கபடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. source:Dinasuvadu.com
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய தீவிரவாதிகளில் 2 பேரை சுட்டுக்கொன்ற எல்லைப் பாதுகாப்புப்படையினர், மற்றொருவனை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எல்லை பாதுகாப்புப் படையினருக்குக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் சத்ரிபோரா, வெஹில், நவ்கம், டங்கம் உள்பட பல்வேறு பகுதியில், நேற்று மாலை முதல் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பட்முரான் (Batmuran) பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு […]
ஓகி புயலால் பாதித்த தமிழகத்திற்கு 2ம் கட்டமாக ₹561 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.அதேபோல் கேரள மாநிலத்திற்கும் 2-ம் கட்டமாக ₹513 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு. source:www.dinasuvadu.com
மோடி பிரதமர் ஆனபிறகு பாஜகவின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது – திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி
2012ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 தொகுதிகளிலும் காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் இந்த ஆண்டு நடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 தொகுதிகளிலும் காங்கிரஸ் 79 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் பிஜேபியின் ஓட்டு சதவீதமானது 15% சரிவு நோக்கி சென்றுள்ளது. அதேபோல் சட்டமன்ற இடங்களும் சுமார் 18 இடங்களை காங்கிரஸ் மற்றும் இதர காட்சிகளுக்கு தரைவார்த்துள்ளது. குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி பெருமையோடு வெற்றிக்காக கொண்டாட ஒன்றும் இல்லை. […]
குஜராத்தில் தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியாகி உள்ளன. அதில் ஆளும் பாஜக அரசு 99 இடங்களை கைபற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி80 இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சையாக 3 வேட்பாளர்கள் வென்றுள்ளனர். சுயேட்சையாக போட்டியிட்ட காங்கிரசின் ஆதரவுடன் களமிறங்கிய தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி 84,785வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட 18,839 வாகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெற்றி வாகை சூடி, அரியணையேற தயாராக உள்ளது. இதனால் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் பொருட்டு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஸா ஆகியோர் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளனர். பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்த கருத்து, ‘பாஜகவுக்கு வெற்றியை தந்த குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி. மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.’ என பிரதமர் டிவிட்டரில் உறுதி அளித்துள்ளார். தேர்தலில் […]
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய இரு மாநிலத்திலும் பாஜக வெற்றியடைந்துள்ளது. அதற்க்கு ஓரளவு கடும் சவாலாக அமைந்தது காங்கிரஸ் கட்சி. இரு மாநிலத்திலும் அரியணை ஏற உள்ளது. இதனை குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க உள்ள புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத், இமாச்சல பிரதேச மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு நான் நன்றி […]
இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் தியோக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராகேஷ் சின்கா வெற்றி.இமாசலப்பிரதேசத்தில் சிபிஐஎம் 16 ஆயிரத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் தன்னந்தனியாக நின்று வென்றது. சிபிஐ (எம்) யின் ராகேஷ் சிங்கா ஹிமாச்சலப் பிரதேசத்தின் திமோக் சட்டமன்ற தொகுதியில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 1993, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தேர்தலில் ஷிம்லா மாவட்டத்தில் உள்ள தியோக் தொகுதியில் வெற்றி பெற்ற ராகேஷ் ஷர்மா இரண்டாவது இடத்தைப் […]