கர்நாடகா மீது கோவா மாநில நீர்வள அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு. மகாதாயி ஆற்று நீரை பகிர்ந்து கொள்வதில் கோவா, கர்நாடகா, மகாராஷ்ட்டிர மாநிலங்களிடையே பிரச்சனை உள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்டிர அரசுகள் இந்நதியின் குறுக்கே அமைக்க திட்டமிட்டுள்ள அணைகளுக்கு கோவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் மகாதாயி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், கோவா மாநிலத்தின் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேட்டியளித்த கோவா நீர்வளத்துறை அமைச்சர் […]
காதல் திருமணம் செய்பவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் அதிரடி . வடமாநிலங்களில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் கிராமத் தலைவர்கள் கொடூரமான தண்டனைகளையும், பல்வேறு நூதன தண்டனைகளை வழங்குவதும் வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டப்பஞ்சாயத்துகளை தடுத்து நிறுத்த கூறியதுடன், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. […]
ராணுவ தளபதி கருத்துக்கு சீனா இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் ராணுவ வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தரைப்படடை தளபதி பிபின் ராவத், சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி கவனத்தை திசை திருப்பிவிட்டு அந்த நேரத்தில் தங்கள் நாட்டு தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கூறினார். அவர்களுக்கு இந்திய வீரர்கள் […]
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தால் 14 பயணிகள் அவதிக்குள்ளாகினர் . கோவாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம் இரவு 12.05க்கு பதிலாக, 25 நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தங்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்காமல், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, முன்கூட்டியே விமானத்தை இயக்கிவிட்டதாக 14 பயணிகள் குற்றஞ்சாட்டினர். ஆனால், விமான நிலையத்தில் பலமுறை அறிவிக்கப்பட்டதாகவும், அப்போது குறிப்பிட்ட 14 பேரும் வரவில்லை என்றும் கூறியுள்ள விமான நிறுவனம், அதிகாலையில் […]
உச்சநீதிமன்ற நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என்றும், வழிமுறைகள்படி நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோக்கூர் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகையான டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 20 ஆண்டுகளாக, தேசத்திற்கே மிகவும் அதிமுக்கியமானதாக கருதப்பட்ட 15 வழக்குகள், ஜூனியர் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. போஃபர்ஸ் ஊழல் வழக்கு, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு, எல்.கே.அத்வானி மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு, சொராபுதீன் […]
இந்தியாவிலேயே அதிகம் பேர் பயணிக்கும் இரண்டாவது சுறுசுறுப்பான விமான நிலையமான மும்பையில், 65 விநாடிகளுக்கு ஒரு விமானம் என்ற வீதத்தில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. இங்கு விமானம் புறப்பாடு மற்றும் வருகையின் நேரம் பெரும்பாலும் தாமதமாவதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர். புறப்பாடு மற்றும் வருகையில் தாமதமாகும் வரிசையில் பனிமூட்டத்தால் அதிகளவு விமான சேவை ரத்தாகும் டெல்லி கூட 2-ம் இடத்திலேயே உள்ளது. பிற நகரங்களில் இருந்து வரும் இணைப்பு சேவை விமானம் தாமதம், பணிக்குழு மாறுதல், அதிகளவு […]
ஜம்மு காஷ்மீரின் கோட்லி பகுதியில் உள்ள ஜன்ட்ரோட் என்ற இடத்தில் எல்லைக்கு அப்பால் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி நடவடிக்கையில் இறங்கினர். இந்திய ராணுவ வீரர்களின் பதிலடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கடும் பனிமூட்டமும், குளிரும், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பொழுது விடிந்து வெகு நேரமாகியும், வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பனிமூட்டம் காரணமாக, ரயில் மற்றும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இன்று, பனிமூட்டம் காரணமாக, 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 39 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 4 ரயில்களின் நேரம், மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் […]
இன்று காலை உச்சநீதிமன்றம் தொடங்கியதும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் லூத்ரா ஆஜரானார். அப்போது, உச்சநீதிமன்றத்தின் மாண்பை குலைப்பதற்கான சதித்திட்டம் நடைபெறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். எனவே செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகியோர் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கறிஞர் லூத்ரா பேசியதை உன்னிப்பாக கவனித்த தலைமை நீதிபதி […]
நாடு விடுதலை பெற்ற பின் 1949-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக கே.எம்.கரியப்பா பதவியேற்றார். அதற்கு முன்பு வரை ஆங்கிலேயரான சர் ஃபிரான்சிஸ் பட்சர் என்பவர் தலைமைத் தளபதியாக இருந்த நிலையில் இந்தியர் ஒருவரிடம் தலைமைத் தளபதி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இன்று இந்திய ராணுவ தினத்தையொட்டி டெல்லியில் உள்ள கரியப்பா ராணுவ மைதானத்தில் சிறப்பு அணிவகுப்பு […]
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்தர மோடியை சந்தித்தார். தெலுங்கானா மாநிலம் உருவானபின் ஆந்திராவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சமாளிக்க வரிச்சலுகை, சிறப்பு நிதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை நிதி தொகுப்புகள் விடுவிக்கப்படாததால், ஆந்திர அரசு அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது, மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. source: www.dinasuvadu.com
அரசுத்துறைகளிடம் ஆதார் எண்களை பகிர அவசியம் இல்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் தகவல் திருட்டைத் தடுக்க விர்ச்சுவல் ஐ.டி. என்ற மெய்நிகர் அடையாள எண்ணைப் பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரித்துறை உள்ளிட்ட எந்த அரசுத் துறையினர் கேட்டாலும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அத்தகைய சூழ்நிலைகளில் அதார் தொடர்பான தங்களின் மெய்நிகர் எண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஆதார் ஆணைய […]
இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். கடல் வழியாக தீவிரவாத ஊடுருவல் மற்றும் கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க இந்திய பாதுகாப்பு படைகள் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் ஜப்பான் நாட்டு கடலோர காவல் படையுடன் இந்திய கடலோர காவல் படை இது வரை 8 முறை கூட்டுபயிற்சியை மேற்கொண்டுள்ளது. சாரெக்ஸ் -18 என பெயரிடப்பட்டு இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சி இன்று தொடங்கி வரும் […]
ராணுவ தளபதி பிபின் ராவத் அதிரடி.சீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக கூறினார். ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிபின் ராவத், “இந்திய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. சீனா வலிமைமிக்க நாடாக இருக்கலாம் அதேவேளையில் இந்தியா வலுவற்ற நாடு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேசத்தின் வடக்கு எல்லை மீது கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்திய எல்லையை ஆக்கிரமிக்க சீனா கடும் பிரயத்தனம் […]
உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்னும் சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் .இதுவரை இல்லாத நிகழ்வாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றுபவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், செல்லமேஸ்வர், மதன் லோக்கூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது … […]
இன்று வெற்றிகரமாக 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது .இதையடுத்து இஸ்ரோ இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்… கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: ‘‘பிஎஸ்எல்வி-சி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் […]
இயேசு கிறிஸ்து சிலுவையில் இறக்கவில்லை என்று இன்றும் பலர் நம்புகின்றனர். இயேசு தனது கடைசிக் காலத்தில் காஷ்மீரில் வாழ்ந்ததாக அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். பாலஸ்தீனத்தில் இருந்து தப்பியோடிய இயேசு, அவரது தாயார் மரியாளுடன் (இன்றைய) பாகிஸ்தானை வந்தடைந்தார். அங்கு சில காலம் வாழ்ந்திருக்கையில் மரியாள் மரணமுற்றார். பாகிஸ்தானில் இப்போதும் முரே (அல்லது மரீ?) என்ற பெயரில் கிராமம் ஒன்றுள்ளது. அங்கு மரியாள் புதைக்கப் பட்டதாக சொல்லப் படும் சமாதி ஒன்றுள்ளது. அதில் “அன்னை மரியாள் துயிலுமிடம்” […]
31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்.இஸ்ரோவின் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.கார்ட்டோசாட் 2எஸ் வரிசை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.1 நானோ செயற்கைக்கோலும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் மேலும் 2 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.6 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.கனடா, பின்லாந்து, பிரான்ஸ் செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன.தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்க செயற்கை கோள்களும் செலுத்தப்பட்டன.இரு வேறு சுற்றுப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுகின்றன. ராக்கெட்டின் செயல்பாடு : கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் சுமந்து […]
நிசான் நிறுவனம் இந்தியாவில் நிரந்தர இடத்தை பிடிக்க ஒரு முயற்சியாக மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது . ஏற்கனவே லீஃப் என்ற மின்சாரக் காரை தயாரித்திருந்த நிஸ்ஸான் நிறுவனம், அதை இந்தியாவில் விற்பனை செய்வதில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தது. இந்த நிலையில், 7 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பாகும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை அந்த நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிஸ்ஸான் நிறுவன அதிகாரிகள் […]
வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை மத்திய அரசு தற்போது மறுத்துள்ளது. வரும் ஜனவரி 20ம் தேதி முதல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்பட போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிச்சியடைந்தனர். இந்நிலையில் இது குறித்து, இலவச சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை என்று கூறியுள்ள இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதற்கான சுற்றறிக்கை எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், […]