குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் 9ஆம் நடைபெற்றது. அதில் சுமார் 68சதவீத வாக்கு பதிவு நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு பகல் 12 மணிவரை சுமார் 39 சதவீத வாக்கு பதிவானது. இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது சொந்த தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது சுற்றி இருந்தவர்கள் மோடி மோடி என கூச்சலிட்டனர். பிறகு வாக்களித்துவிட்டு அவர்களிடம் பேசிவிட்டு மோடி சென்றார். வாக்களித்துவிட்டு, பிரதமர் மோடி வீதி […]
பெட்ரோல், டீசல், மதுபானம் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் – டெல்லியில் மாநில அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
நிலக்கரி முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கான தண்டனை வரும் 16இல் அறிவிப்பு சிறு வயதில் இரு மகள்களும், உடல்நலப் பிரச்னை இருப்பதால் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என மதுகோடா தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை
தமிழகம், ஆந்திரா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணியை தொடர வேண்டும் எனவும் உத்தரவு.
எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி. சிறப்பு நீதிமன்றம் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை மட்டுமே விசாரிக்கும்.
குஜராத்தில் இறுதி கட்ட வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இல்லாத பரபற்பப்பை தற்போது கூட்டிவருகிறது. அனைத்து வாக்குசாவடிகளிலும் போலிஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு கண்காணிக்கபடுகிறது. இந்நிலையில் தற்போது 12 மணிவரை நடந்த வாக்குபதிவில் 39 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது. இதுவரை நடந்த வாக்குபதிவுகள் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டமாக நடந்த வாக்குபதிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 18ஆம் தேதி நடக்க உள்ளது.
தெலுங்கானாவில் மாவோஸ்டுகள் அதிகமாக நடமாடுவதாக வந்த தகவலின் பெயரில் 8 மாவோஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாரத்ரி கோதகுடேம் பகுதியில் உள்ள தெலுங்கபாலி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடமாடுவது தெரிந்தவுடன் கிராம மக்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் போலீசார், சிறப்பு அதிரடி படையினருடன் சென்று, பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிசண்டை இன்று காலை முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் […]
22 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவின் ஆட்சியில் செயல்பட்டு வரும் குஜராத் மாநிலத்தில் தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதில் முதல் கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்நிலையில் அடுத்து இறுதிகட்ட தேர்தல் இன்று (டிசம்பர் 14) நடைபெற்று வருகிறது. குஜராத்தில் இன்று மொத்தம் உள்ள 182 தொகுதியில் மீதம் உள்ள 93 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. […]
நேற்று கொள்ளையர்கள் தேடுதல் வேட்டையில் எங்கள் போலீஸார் தமிழக தனிப்படைக்கு உதவி செய்தார்கள். எப்போதுமே எங்களுக்கு குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது – ராஜஸ்தான் டி.ஜி.பி. கல்ஹோத்ரா
“குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக நரேந்திர மோடி கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்கிறார் பா.ஜ.க.தலைவர் முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்ஹா. தேர்தல் ஆதாயத்துக்காக அண்டை நாட்டை வீண் வம்புக்கு இழுப்பது ஒரு நாட்டின் பிரதமர் செய்யக் கூடிய காரியமல்ல என்கிறார் . “அப்படி பாகிஸ்தான் தலையீடு இருப்பது உண்மையென்றால் ஒரு பிரதம மந்திரி அது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அதற்குப் பதில் நரேந்திர மோடி தேர்தல் மேடைகளில் மட்டும் இது பற்றி புகார் கூறிவருகிறார். […]
நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொலை தொடர்பாக, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது – பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ். தமிழக போலீசாருக்கு, ராஜஸ்தான் போலீஸ் உறுதுணையாக இருக்கும் – தீபக் பார்கவ்
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றபோது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார் துப்பாக்கி சூட்டில் கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பவருக்கு படுகாயம்
ஒக்கி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் மீட்பு பணிகளை துரிதபடுத்தவும் கோரியுள்ளார்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் சபர்மதி ஆற்றிலிருந்து ஒரு கடல் விமானத்தில் இப்போது பறந்து கொண்டிருக்கிறார். இந்த விமானம் தண்ணீரிலிருந்து டேக் ஆஃப் ஆகிப் பறக்கும். 125 கோடி இந்தியர்களுக்கு இந்த விமானம் பயனளிக்கும் என்கிறார் அவர். வளர்ச்சியின் அடையாளமாக இது காட்டப் படுகிறது. அனைத்து டெலிவிஷன் சானல்களும் குதூகலாமாகக் குதித்துக் கொண்டிருக்கின்றன. சில சானல்களில் இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப்போகிறது; இதுதான் வளர்ச்சி என்று கூவிக் கொண்டிருக்கின்றன. கடல் விமானத்தில் […]
அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான கேள்வி தாள்களை வழங்கியதோடு ,மட்டுமில்லாது தேர்வு அறைக்கு செல்ல உடை,அணிகலன் என பல கட்டுபாடுகளை விதித்தது சர்ச்சைக்குரிய செயலாகவும் இருந்தது. மேலும் இது அடித்தட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் என பல எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்தின.பல வழிகளில் […]
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் விசாரித்து முடிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு சம்மதம் தெரிவித்து மத்திய சட்ட அமைச்சகம் பதில் மனு.
குஜராத் மாநிலத்தில் தேர்தல் முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட தேர்தல் வருகிற 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கட்சி தலைவர்கள் இன்று இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். குஜராத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ரோட்டில் பிரசாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநில பிரசாரத்திற்காக அகமதாபாத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்கிறார். சபர்மதி ஆற்றில் இருந்து […]
ஜம்மு காஸ்மீரில் தற்போது கடும் பனிபொழிவு பெய்துவருகிறது. இதனால் அங்கு எல்லையில் வேலை பார்க்கும் ரானுவ வீரர்கள் கடும் அவதிக்கு உட்படுகின்றனர். பண்டிபோரா எல்லை பகுதியில் எல்லை கட்டுபாட்டு கோட்டின் குரேஸ் செக்டரில் பணிசரிவு ஏற்பட்டது. இந்த சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளார். மயமான ராணுவ வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக மற்ற இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் அசெர்பைஜான் நகரில் உள்ள பாகு நகருக்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிறகு என்ஜினியர்கள் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இங்கிலாந்தில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மும்பையில் இருந்து தாமதமாகவே புறப்பட்டு சென்றது. இங்கிலாந்து நாட்டில் […]