ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது – பாஜக செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் .இந்நிலையில் அவரது மனுவானது உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. மனு மீதான விசாரணையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓகி புயலால் தென் தமிழகம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது, கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் இன்னும் வீடு திரும்ப மடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற ஓகி புயல் அடுத்து கேரளாவை நோக்கி சென்றது. இதனால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டது. ஏற்கனவே ஒகி புயலால் கேரளாவில் 40 பேர் பலியாகினர். இந்நிலையில் நேற்று கொச்சி கடற்கரையில் அழுகிய நிலையில் மிதந்த 2 பேர் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் ஒகி புயலுக்கு கேரளாவில் பலியானவர்களின் எண்ணிக்கை […]
“ராமர் கோயிலா அல்லது மசூதியா – எது உங்களுக்கு வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்” – குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி இப்போது மேடைக்கு மேடை முழங்குவது. பல மதத்தவர்கள் வாழும் ஒரு நாட்டின் பிரதம மந்திரி மதச்சார்பற்றவராக இருக்கவேண்டும் – அல்லது அப்படியாவது வெளியே காட்டிக் கொள்ளவேண்டும். ஆனால் இவர் இப்படி வெளிப்படையாகவே தான் ஒரு இந்துத்துவ வாதிதான் என்று பறை சாற்றுகிறார்.இந்திய அரசியலமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே இவரெல்லாம் […]
1998ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருமதி சோனியா காந்தி அவர்கள் பொருப்பேற்றர்.அவர் தலைவராக பொறுப்பேற்று 19 வருடங்கள் ஆகின்றன. கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் நிலவரங்களில் ஈடுபடாமல் இருந்து வருகிறார், இந்த இடைப்பட்ட காலங்களில் காங்கிரஸ் கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவரது மகன் ராகுல் காந்தி தான் எடுதுவந்துள்ளர். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்படலாம்,என்றுகாங்கிரஸ் அரசியல் வட்டாரங்களில்எதிர்பர்கபடுகிறது. கட்சியின் தலைவருக்காக போட்டி ஈடுவதற்கு வேட்புமனுதாக்கல் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பாராமுல்லா மாவட்டத்தில் ஹந்த்வாரா பகுதியில் நேற்று இரவில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதைனையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள்மீது பதில் தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் இந்த தாக்குதல் நீடித்தது. நடந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படதாக […]
அகமதாபாத் வீதிகளில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு – அகமதாபாத் போலீஸ் அதிரடி . சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு இருவரும் பிரசாரம் செய்ய தடை – அகமதாபாத் போலீஸ்.
ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வளைந்தளங்களில் என்றைக்குமே சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தான் அதிகமான பின்தொடர்பாளர்களுடன்(followers) முன்னணியில் இருப்பார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 37.5 மில்லியன் ஆதரவாளர்களுடன் இந்தியாவில் ட்விட்டரில் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி. இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகமான பின்தொடர்பாளர்களை (followers) கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பத்து பிரபலங்கள்: இந்திய பிரதமர் நரேந்திரமோடி நடிகர் அமிதாப்பச்சன் நடிகர் ஷாருக்கான் நடிகர் சல்மான்கான் நடிகர் அக்ஷய்குமார் […]
ராமேஸ்வரத்திற்கு யாத்திரை வந்த ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியர்களிடம் கொள்ளை. ரூ.18,000 மற்றும் பொருட்கள் கொள்ளை போனதால் காவல் நிலையத்தில் தஞ்சம்.
அசாமின் ஜோர்கட் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் கணவரின் உடல்நிலை சரியில்லாததால் சில மருந்துகளை வாங்குவதற்காக வீட்டிலிருந்து மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்க வேண்டியதாக உள்ளதால் 55 வயதுடைய நா-அலி போலியகாய்ன் புக்கிரி என்ற குடும்ப நண்பரிடம் தங்களது 6 வயதுடைய பெண் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார் அவரது பெற்றோர்கள்.குழந்தை என்று கூட பாராமல் அந்த பச்சிளம் பெண் பிள்ளையை கற்பழித்திருக்கிறார் அந்த முதியவர். பின்பு மருந்தகத்தில் மருந்து வாங்கிவிட்டு பெற்றோர்கள் வீடு திரும்பி வந்தபோது,அந்த பெண் […]
வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தொழிற்சாலை முக்கியமல்ல; விவசாயம் ஓன்று போதும் வேலையில்லாத் திண்டாட்டமே இருக்காது – அன்னா ஹசாரே
பாரதிய ஜனதா கட்சியானது, ஆண்ட இந்த மூன்றரை ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் 3,755 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராம்வீர் தன்வர் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலை அவர் பெற்றார். இதனை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை, பாஜக அரசானது, விளம்பரங்களுக்கு மட்டும் […]
குஜராத்தில் தேர்தல் களம் படு பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. இதில் குஜராத் பகுதியில் முதல் கட்ட வாக்குபதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்சும் கடும் போட்டி போட்டு வருகின்றனர். காங்கிரசுக்கு ஆதரவாக பட்டேல் சமூகத்தினர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் ஆதரவும் வெகுவாக பெருகி வருகிறது. இந்நிலையில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அதிகமுறை ராகுல் பெயரை உச்சரித்து விமர்சனம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி […]
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா, ராஜ்நாத் சிங்குடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு. புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மத்திய அமைச்சர்களிடம் பினராயி விஜயன் நேரில் வலியுறுத்தல்
உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பதவி வகித்த பின்பு அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் காவி வண்ணத்திலேயே காட்சியளிக்கின்றன. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது போதாதென்று, தற்போது அரசு பள்ளிகளுக்கும் காவி வண்ணம் பூசி மேலும் இந்து மதவாத சர்ச்சைக்கு வலு சேர்த்துள்ளது பாஜக அரசு. இந்த காவி வண்ணம் பூசப்பட்ட பள்ளிகள், உத்திரபிரதேச மாநிலத்தில் பிலிபட் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள 100 துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் நடத்திய […]
ஒகி புயல் பாதிப்புக்கு நிதி கேட்டு பெற கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி செல்கிறார் மாலை 5 மணிக்கு புயல் சேதம் குறித்த அறிக்கையை ராஜ்நாத்சிங்கிடம் அளித்து நிதி உதவி கோருகிறார்
தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு […]
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஜராத் பிரச்சார கூட்டத்தில் பேசிய போது, ‘எங்கள் காங்கிரஸ் கட்சியானது பாரத பிரதமர் மோடியை மதிக்கிறது. அதனால் தான் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதம மந்திரி பதவிக்கு காங்கிரசு மரியாதை செலுத்துகிறது. தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கட்சியில் யாரும் அவருக்கு எதிராக பேச முடியாது. பிரதம மந்திரி மோடியும் எங்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது, நாங்கள் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கை […]
ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என நமது இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் தற்போது உணவுத்துறை இதனை மறுத்துள்ளது. இதனால் ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டால் ஜனவரி மாதம் முதல் ரேசன் பொருட்கள் வழங்கபடாது. இந்த வருடம் டிசம்பருக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் எனவும், அதலால் ஜனவரி முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கபடாது. எனவே இதுவரை ஸ்மார்ட் கார்ட்-க்கு விண்ணபிக்காதவர்கள் விண்ணபிக்க உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரேசன் பொருட்கள் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும் அடுத்தவருடம் ஜனவரி முதல் ரேசன் கடைகளில் ரேசன் பொருட்கள் வளங்கபடாது என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது மத்திய உணவுதுறையானது, ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
வங்கிகணக்குடன் ஆதார் நம்பர், பான் நம்பர் இவற்றை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்து இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதார் எண், பான் நம்பர், இணைக்க மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 139 சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க காலஅவகாசம் நீட்டிக்க முடிவு செய்து இருப்பதாகவும் முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்படும் எனக்கூறியுள்ளது.