இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தேசப்பற்றை ஊட்டும்வகையில், திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு ஏற்கனவே வெளியாகி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அவற்றை களையவும், புதிய வழிகாட்டும் விதிகளை உருவாக்கவும் அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 மாதங்களில் இந்தக் குழு பரிந்துரைகளை அளிக்கும் என்றும், அதுவரை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
source:www.dinasuvadu.com