நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கூட்டத்தொடர் தொடங்க முடியவில்லை.
பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு 12 நாட்கள் முன்பாகவே (மார்ச் 23) முடிக்கப்பட்டதால், இரு கூட்டத் தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால் மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இரு அவைகளையும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எல்லை விவகாரம், பொருளாதார வீழ்ச்சி, உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…