அடுத்தமாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..!

கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மூடப்பட்டது. தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக இதுவரை கூட்டத்தொடர் நடைபெறவில்லை.
சமீபத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டத்தொடர் அடுத்தமாதம் 14-ம் தேதி கூடி அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025