நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை பெகாசஸ் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.
ஜூலை 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொடர்ந்து 13 ஆவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெகாசஸ் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாளை காலை 10 மணியளவில் மாநிலங்களவை மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதில் அடுத்த 5 நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ராகுல் காந்தியும் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…