ரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனை என்று OLX -ல் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.30 ஆயிரம் கோடிக்கு சர்தார் வல்லபபாய் படேல் சிலை கொரோனா வைரஸுக்கான மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்கு நன்கொடையாக வழங்குவதற்காக விற்பனைக்கு வர உள்ளதாக OLX நிறுவன இணையப்பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் விளம்பரம் செய்தார். அதில், அவசரம்! ஒற்றுமைக்கான சிலை விற்பனைக்கு. மருத்துவமனைகள் மற்றும் சாதனங்களுக்கான அவசரப் பணத்தின் தேவைக்காக என்று இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாக செய்தி வெளியானதை தொடர்ந்து, படேல் சிலை வளாக நிர்வாகிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.இதனையடுத்து இந்த விளம்பரத்தை OLX நிர்வாகம் நீக்கிவிட்டது.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விளம்பரம் செய்த நபரைத் தேடி வருகின்றனர்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…