தனியார் ரயில் தாமதமாக வந்தாலும் , முன்பே வந்தாலும் அபராதம் – ரெயில்வே அறிவிப்பு .!

Published by
murugan

இந்தியா  முழுவதும் குறிப்பிட்ட 109 வழித்தடங்களில் 151 தனியார் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு  12 ரயில்களும், 2023-ஆம் ஆண்டு 45 ரயில்களும், 2025-ஆம் ஆண்டு 50 ரயில்களும், 2026-ஆம் ஆண்டு 44 ரயில்கள் என மொத்தம் 151 தனியார் ரயில்களை வருகின்ற  2027-ஆம் ஆண்டிற்குள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனியார் ரயில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ரெயில்வே  நேற்று வெளியிட்டது. அதில்,  தனியார் ரயில்கள் வருடத்தில் 95 சதவீதம் குறித்த  நேரத்தில் இயக்க வேண்டும்.  ரயில்வே கட்டமைப்பை பயன்படுத்த 1 கி.மீ.க்கு ரூ.512   தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டும். தனியார் ரயில் 10 நிமிடத்துக்கு முன்பே சென்றாலும் அபராதம் செலுத்த வேண்டும்.

அந்த அபராதம் 10 கி.மீ. தூர பயன்பாட்டுக்கான அபராத தொகையாக வசூலிக்கப்படும்.  தனியார் ரயில் தாமதமாக வர ரயில்வே காரணமாக இருந்தால் ரயில்வே துறை இழப்பீடு கொடுக்கும். ஒரு தனியார் ரயில் ரத்து செய்ய அந்த தனியார் நிறுவனம் காரணமாக இருந்தால், பயன்பாட்டு கட்டணத்தில் 4-கில்  1 பகுதி அபராதமாக வசூல் செய்யப்படும்.

அதுவே,ரயிலை  ரத்து செய்ய ரயில்வே காரணமாக இருந்தால் அந்த தொகையை ரயில்வே வழங்கும். ரயில்கள் தாமதம் வருவதற்கு தனியார் நிறுவனமும், ரயில்வே துறையும்  காரணமாக இருந்தால், 70 சதவீத பொறுப்பை தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். ரயில் தாமதமாக வர மோசமான வானிலை, விபத்து, போராட்டம், ஆகியவை காரணமாக இருந்தால் தனியார் நிறுவனமும், ரயில்வே துறையும் இழப்பீடு வழங்க தேவையில்லை.

Published by
murugan

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

5 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

6 hours ago