மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் :
திரையரங்குகளில் 50% இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் .ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்.மாஸ்க் அணிந்த படியே அனைவரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் .திரையரங்கு உள்ளே நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது .ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…