Categories: இந்தியா

பிரதமர் மோடிக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி!

Published by
பாலா கலியமூர்த்தி

Delhi high court: பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாறி மாறி விமர்சனம் செய்து கொள்கின்றனர்.

இதனால் இரு கட்சி தலைவர்கள் மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத ரீதியாக பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்பவர் கடந்த 15ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி இந்து தெய்வங்கள், வழிபாட்டு தலங்கள் பெயர்கள் மூலம் மதத்தை தொடர்புபடுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் தேர்தல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அப்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால், இந்த வழக்கின் மீதான விசாரணையானது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த மனு விசாரணைக்கு தகுதியற்றது, இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. இதனால் இந்த மனு முற்றிலும் தவறானது என கூறி பிரதமர் மோடிக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

12 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

15 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

16 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

18 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

19 hours ago