தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஓட்டுநர் முகமது ,சென்ன கேசவலு மற்றும்கிளீனர் சிவா , நவீன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் வைத்திருந்தனர்.பின்னர் போலீசார் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 03-ம் தேதி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிரியங்காவின் செல்போன் மற்றும் சில பொருள்களை பிரியங்காவை கொன்ற இடத்திலே வைத்து இருப்பதாக விசாரணையில் கூறினார். பின்னர் நால்வரையும் பெண் மருத்துவர் பிரியங்கா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது போலீசாரை நான்கு பேரும் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும் , தற்காப்புக்காக போலீசார் 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.
இந்நிலையில் நான்கு பேர் என்கவுண்டர் செய்தது தொடர்பாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் நீதிமன்றத்தின் வழிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை என கூறி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி மற்றும் பிரதீப் குமார் ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…