இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.இந்த விமானம் நீரில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலைக்கு மரியாதை செலுத்தினார்.இதன் பின், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள பட்டேல் சிலை இடையே கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து சேவையை தொடங்கி வைத்தார்.இன்று முதல் தினந்தோறும் நீர்வழி விமானங்கள் இயக்கப்பட உள்ளது.உதான் திட்டத்தின் கீழ் இதற்கான கட்டணம் ரூ.1,500 இருந்து தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயணச் சீட்டுகளை http://www.spiceshuttle.com என்ற இணையதள முகவரியில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…