கொவைட்-19 வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைய்யில் இந்த கொடிய கொவைட்-19 இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.அதில், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்து பகுதிகளும் வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொவைட்-19 முன்னெச்சரிக்கை தொடர்பாக பாரத பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு வானொலியில் இன்று இரவு 8மணிக்கு உரையாற்றுகிறார். இதில், கொவைட்-19 குறித்து மக்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கை குறித்தும், தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தற்போதைய அவசியம் குறித்தும் அவர் எடுத்துக் கூறுவார் எனத் தெரிகிறது. இதுமட்டுமின்றி இந்நோய் பரவாமல் தடுக்க அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசுவார் எனத் தெரிகிறது.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…