#Breaking : 4ஆம் கட்ட ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி.!

நான்காம் கட்ட ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நாடு முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. அதில் பல்வேறு கருத்துக்களை நாட்டுமக்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அதில் முக்கியமாக நான்காம் கட்ட ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், அந்த 4ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். இந்த 4ஆம் கட்ட ஊரடங்கின் விதிமுறைகள் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மே 17ஆம் தேதிக்குள் இந்த 4ஆம் கட்ட ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025