PM Modi Election Campaign [Image source : ANI]
சென்னை: பாஜக என்றுமே சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்று, இன்று 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக 8 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய அரசியலமைப்பு என்பது மதச்சார்பற்ற அமைப்பு. அதனை தவிர்த்து மதத்தின் அடிப்படையில் பிரிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், யாரையும் சிறப்பு குடிமக்களாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்றும் கூறினார். ஆனால் இந்த உணர்வை காங்கிரஸ் தொடர்ந்து மீறி வருவதாகவும், வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை பயன்படுத்தி வருவதாகவும் , இதனை அம்பலப்படுத்துவதே தனது முயற்சி என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.
பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல, இன்று மட்டுமல்ல, என்றுமே சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக செயல்படாது. சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட தவறாக பேசியதில்லை. நான் காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக பேசி வருகிறேன். அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் குறித்து பேசுகிறேன். அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று அப்போதே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இப்போது காங்கிரஸ் அதில் இருந்து விலகி செல்கிறது என்றும் காங்கிரஸ் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார் பிரதமர் மோடி.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…