மேற்கு வங்க பாஜக எம்.பி.க்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு நாளை மறுநாள் ஒத்திவைப்பு
மேற்கு வங்க பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தவிருந்த சந்திப்பு தற்போது நாளை மறுநாள் (மார்ச் 31ஆம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக நாளை நடைபெற இருந்தது. பிர்பும் வன்முறைக்குப் பிறகு மேற்கு வங்காளத்தில் எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
வன்முறைக்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. பிர்பூம் வன்முறை தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக சாடிய பாஜக மாநிலத்தில் ஜனநாயகம் “கொலை செய்யப்படுவதாக” குற்றம் சாட்டியது. மேலும், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்கட் என்ற பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பகது ஷேக் கொல்லப்பட்டார். பகது ஷேக்கை அதே பகுதியை சேர்ந்த சோனா ஷேக் என்பவரின் ஆதரவாளர்களே குண்டு வீசி கொலை செய்ததாக தகவல் வெளியானதை அடுத்து ஆத்திரமடைந்த ஷேக் ஆதரவாளர்கள் சோனா ஷேக்கின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…