ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரியங்கா காந்திக்கு ரூ.6,100 அபராதம் விதித்த போலீசார்.!

Published by
murugan
  • லக்னோவில் கைது செய்யப்பட்ட  முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியின் குடும்பத்தை பார்க்க பிரியங்கா காந்தி சென்றார்.
  • அப்போது போலீசார் அனுமதிக்காததால் கட்சி நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து எஸ்.ஆர்.தாராபுரியின் குடும்பத்தினரை சந்தித்தார்.

குடியுரிமை திருத்த மசோதா இரண்டு மோசோதாவிலும் நிறைவேற்றப்பட்டது.  இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் , குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் , பொதுமக்கள் மற்றும்  மாணவர்கள்  சார்பிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல இடங்களில் போராட்டம் வலுவடைந்து வன்முறை வரை சென்று உள்ளது . இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும் , புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில்  ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (வயது 76) கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரியை சந்திக்க நேற்று முன்தினம் பிரியங்காவை காரில் சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி எஸ்.ஆர். தாராபுரியின் வீட்டிற்கு நடந்து சென்றார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதன் காரணமாக போலீசாரால் பிரியங்கா காந்தியை பின் தொடர முடியவில்லை.

பின்னர் பிரியங்கா காந்தி கட்சி நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து எஸ்.ஆர்.தாராபுரியின் குடும்பத்தினரை சந்தித்தார். பிரியங்கா காந்தியும், இருசக்கர வாகனம்  ஒட்டிய கட்சி நிர்வாகியும் தலைக்கவசம் அணியவில்லை.

இந்நிலையில் லக்னோ காவல்துறை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இருசக்கர வாகனம் ஒட்டிய கட்சி நிர்வாகி மற்றும் பிரியங்கா காந்திக்கு ரூ.6,100 அபராதம் விதித்தது.

Published by
murugan

Recent Posts

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

18 minutes ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

4 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

5 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

7 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

7 hours ago