புதுச்சேரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரி வந்தடைந்தார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விமான நிலையத்தில் வரவேற்றார். மேலும் அவருடன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் உடனிருந்தார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் இன்று புதுச்சேரி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர்தர கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்.
புற்று நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிப்பதற்காக ரூ.17 கோடியில் கதிரியக்க சிகிச்சை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு செய்கிறார். பின்னர், முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்திற்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்மு பார்வையிடுகிறார்.