cylinders and petrol [Image source : TV 9]
மணிப்பூரில் மூன்று வாரங்களுக்கு முன்பு இனக்கலவரம் தொடங்கியதில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டன.
கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் பயங்கர கலவரம் நடந்து வருகிறது. குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட இந்த மோதல், வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில், மணிப்பூரில் கலவரத்தின் தாக்கத்தால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அங்கு கலவரம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல பொருட்கள் சாதாரண விலையை விட இரட்டிப்பாக விற்கப்படுகின்றன.
அதன்படி, சமையல் கேஸ் விலை ரூ.1800-ஐ எட்டியுள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.170 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அப்பகுதி மக்கள் விலை உறவு குறித்து புகார் தெரிவிக்கின்றனர். முன்பு, 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சூப்பர்ஃபைன் அரிசி ரூ.900 ஆக இருந்தது, ஆனால் இப்போது ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளது. முட்டை விலை ரூ.10, ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.100 ஆக உயர்வு.
இந்த வன்முறையின் போது 71 பேர் உயிரிழந்தனர் என்றும், 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் 1700க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…