இன்று ஐ.நா சபையில் உரையாற்ற நியூயார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி…!

இன்று ஐ.நா சபையில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி நியூயார்க் சென்றடைந்துள்ளார்.
அமெரிக்கா வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த நிலையில், நேற்று இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இந்த மாநாட்டுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர், துணை அதிபர், இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நடைபெற உள்ள ஐநா சபையின் 76-வது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தற்பொழுது நியூயார்க் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025