Modi yoga - Srinagar [File Image]
ஜம்மு மற்றும் காஷ்மீர் : உடல் நலம் மற்றும் சமூக நல்லிணக்கத்தில் யோகாவின் உலகளாவிய தாக்கத்தை வலியுறுத்தி, 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீநகர் தால் ஏரிக்கரையில் யோகாசனம் செய்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த யோகா தினத்தில் பங்கெடுத்த மக்களுக்கும், உலகெங்கும் யோகா செய்பவர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கவிருந்த நிகழ்ச்சி, கனமழையால் தடைபட்டது. பின்னர், ஏற்பாடுகள் வீட்டுக்குள் மாற்றப்பட்டன. தால் ஏரியில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு யோகா அமர்வுக்குப் பிறகு, காஷ்மீர் மக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், BSF வீரர்கள் மற்றும் பலருடன் இணைந்து பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நாடாபெட் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இன்று யோகா செய்தார். மேலும் மும்பையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் யோகாசனம் செய்தனர்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பித்தோராகரில் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் யோகா செய்தார். பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் சர்வதேச யோகா தினத்தையொட்டி பாட்லிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் யோகாசனம் செய்தனர்.
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…