பாரதியாரின் 100 வது நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி,தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
மகாகவி பாரதியார் தனது 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11- நள்ளிரவு இறந்தார்.இதனையடுத்து,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் தேதியன்று பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில்,பாரதியாரின் நினைவை போற்றும் வகையில்,செப்டம்பர் 11 ஆம் தேதி ‘மகாகவி நாளாக’ கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.அதன்படி,இன்று பலரும் அவரது நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.
இந்நிலையில்,பாரதியாரின் 100 வது நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி,தமிழில் ட்வீட் செய்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
“சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்”,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…