குஜராத் சென்ற பிரதமர் மோடி, சர்தார் படேல் விலங்கியல் பூங்காவை திறந்து வைத்து, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்தியாவில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை “தேசிய ஒற்றுமை தினம்” என ஒவ்வொரு ஆண்டு, அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை இந்தியா முழுவதும் “ஏக்தா திவாஸ்” அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, குஜராத் வந்தடைந்தார். குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர், அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனைதொடர்ந்து, நர்மதா மாவட்டத்தில் கெவாடியாவில் உள்ள மூலிகை பூங்காவை தொடங்கிவைத்த அவர்,குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்காவையும் தொடங்கி வைத்தார். மேலும், சர்தார் படேல் விலங்கியல் பூங்காவை திறந்து வைத்து, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். அவருடன் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீரிலும், வானிலும் செல்லும் “சீப்ளேன்” எனப்படும் கடல்வழி விமான சேவையை நாளை தொடங்கிவைக்கவுள்ளார். அதன்பின் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…