அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அலிகார்முஸ்லீம்பல்கலைக்கழகம் :
இந்திய மேலவைச் சட்டத்தின் கீழ் முகமது ஆங்கிலோ ஓரியண்டல் (எம்.ஏ.ஓ) கல்லூரியை மத்தியப் பல்கலைக்கழகமாக உயர்த்தியதையடுத்து,அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், கடந்த 1920-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக மாறியது.எம்.ஏ.ஓ கல்லூரி, கடந்த 1877-ஆம் ஆண்டு சர் சையது அகமது கானால் நிறுவப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் 467.6 ஹெக்டர் நிலப்பரப்பில் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது.மல்லபுரம் (கேரளா), முர்ஷிதாபாத் ஜங்கிபூர் (மேற்கு வங்காளம்) மற்றும் கிஷன்கஞ் (பிகார்) ஆகிய மூன்று நகரங்களிலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மையங்கள் இயங்குகின்றன.
இந்நிலையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.இந்த நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் பிரதமர் வெளியிட உள்ளார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் சையேத்னா முஃபதல் சைபுதீன் மற்றும் மத்திய கல்வி அமைச்சர்ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…