தலைநகர் தில்லியில் உள்ள அரசு பங்களாவிலிருந்து வெளியேறிய, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா, வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், அவர் விரைவில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிற்கு சென்று, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கவும் முடிவு செய்து உள்ளார்.
வரும், 2022ல், உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவே, அங்கு அவர் முகாமிட முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, உத்தர பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் கொதித்தெழுந்த பிரியங்கா, அம்மாநில அரசுக்கு எதிராக, தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளார். பிரியங்கா களத்தில் இறங்கியதும், அவருடன் ராகுல் காந்தியும் சேர்ந்து கொண்டார். மாநில அரசுக்கு எதிராக, தினமும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார் பிரியங்கா. மற்ற எதிர்க்கட்சிகளும் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ‘மேடம், ராகுலையே முந்திவிட்டார்; இவரை வைத்து தான் இனி அரசியல் நடத்த வேண்டும். காங்கிரஸ் பிழைக்க இது தான் வழி’ என்கின்றனர், கட்சியின் மூத்த தலைவர்கள்.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…