டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் சிக்கல் -நேரத்தை மாற்றி அறிவித்த ரயில்வே

15 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, மாலை 6 மணிக்கு தொடங்குகிறது என்று ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், பயணிகள் ரயில் படிப்படியாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட 15 நகரங்களுக்கு நாளை முதல் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்த, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.ஆனால் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சரிசெய்யப்படும் என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. நாளை முதல் இயக்கப்படவுள்ள ரயில்களுக்கான முன்பதிவு 6 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025