சீனாவில் உள்ளஉகான் நகரில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தற்போது 100- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில் இந்தியாவிலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவேண்டும் என மத்திய ,மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெல்லி பள்ளி கல்லூரிகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…