ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 09 .28 மணிக்கு பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தம் 14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது.
அதில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு உள்ளது.அந்த 13 செயற்கைக்கோள்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானது.
இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவித்தது. இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. புவியில் இருந்து 509 கி.மீ தொலைவிலான சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்து புவியை கண்காணிப்பதுடன் ,புகைப்படத்தையும் எடுத்து அனுப்ப உள்ளது.
இரவு நேரத்திலும் புவியின் புகைப்படத்தை தெளிவாக எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. இதன் செயல்பாடு 5 ஆண்டுகள் இருக்கும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவும் 74-வது ராக்கெட் இதுவாகும்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…