ஜார்கண்ட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியானது,கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது ஊழியரை வேலைக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின்,போகாரோவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரியும் அரவிந்த் குமார் என்பவர்,கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனால்,கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார்.
இருப்பினும்,அவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் இருந்து வருகிறார்.அதனால்,மெடிக்கல் லீவ் வேண்டுமென்று அரவிந்த் குமார் வங்கியில் தெரிவித்தார்.ஆனால்,வங்கி அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து,பணிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.
இதன்காரணமாக,அரவிந்த் குமார் தனது ராஜினாமா கடித்ததை சமர்ப்பித்தார்.எனினும்,வங்கி அதிகாரிகள் அதையும் நிராகரித்தனர். மேலும்,அவரது சம்பளத்தை குறைப்பதாகவும் பயமுறுத்தியுள்ளனர்.
இதனால்,வேறு வழியில்லை என்பதால்,அரவிந்த் குமார் ஆக்ஸிஜன் உதவியுடன் கடந்த திங்களன்று பணிக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில்,அரவிந்த் குமாருடன் வங்கிக்கு வந்த அவரது குடும்பத்தினர்,உடல்நிலை சரியில்லாத அவரால் வேலை செய்ய முடியாது.எனவே அவருக்கு மெடிக்கல் லீவ் வேண்டுமென்று கெஞ்சியுள்ளனர்.இதனையடுத்து,வங்கி அதிகாரிகள் அரவிந்த் குமாருக்கு மெடிக்கல் லீவ் கொடுத்து,வீட்டிற்கு செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
எனினும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை வேலைக்கு வர வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…